’நேர்கொண்ட பார்வை’மூலம் தமிழுக்கு மிக மிக லேட்டாக எண்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை வித்யா பாலன், தனது துவக்க காலத்தில் தமிழ்ப் பட இயக்குநர் ஒருவர் தன்னை ரூமுக்கு அழைத்ததாக அதிர்ச்சி அளித்திருக்கிறார். அவர் தமிழில் இரண்டே படங்களில் நடிக்க கமிட் ஆகி தூக்கப்பட்டார் என்பதால் அவர் யார் என்பதை வாசகர்களின் யூகத்துக்கே விட்டுவிடுகிறோம்.

இந்தியில் இன்று பல கோடிகளில் சம்பளம் வாங்கும் வித்யாபாலன் துவக்க காலம் அவ்வளவு சிறப்பாய் இல்லை. நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக ‘மனசெல்லாம்’படத்தில் அறிமுகமானவர் இரு தினங்கள் படப்பிடிப்பு நடந்த பிறகு தூக்கி அடிக்கப்பட்டார். அடுத்து லிங்குசாமியின் ‘ரன்’படத்தில் ஒப்பந்தமாகி ஒரே நாளில் வெளியேறினார். அடுத்து ஒன்றிரண்டு மலையாளப்படங்களிலும் ஒப்பந்தமாகி அவையும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

 இந்நிலையில் தனது துவக்க கால சினிமா அனுபவம் குறித்துப் பேசிய  வித்யா பாலன் சென்னையில் இருந்த போது அவரிடம் இயக்குநர் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்த தகவலை வெளியிட்டிருக்கிறார். அதாவது, தமிழ் இயக்குநர் அவரை ஓட்டல் அறைக்கு அழைத்தாராம்.இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய வித்யா பாலன், ”நான் சென்னையில் இருந்த போது என்னை சந்திக்க ஒரு இயக்குநர் வந்தார். காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் என கூறினேன். அதற்கு அவர், ”நிறைய பேசணும், ரூமுக்கு போவோம்” என்று கூறி, ரூமுக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார். நானும் ரூமுக்கு சென்று கதவை திறந்தே வைத்தேன். ஆனால், அப்படிக் கதவைத் திறந்துவைப்பேன் என்று எதிர்பார்க்காத  அந்த இயக்குநர் 5 நிமிடங்கள் மட்டுமே இருந்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்” என்று தெரிவித்தார்.