Asianet News TamilAsianet News Tamil

viduthalai update : விடுதலை தள்ளிப்போக இவர் தான் காரணமாம்..ஒளிப்பதிவாளருக்காக காத்திருக்கும் வெற்றி மாறன்?

viduthalai  update : விடுதலை படத்தில் பணியாற்றி வருவதற்கு இடையே சரவண ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் படம் உள்ளிட்ட மூவிகளில் வேல்ராஜ் கமிட் ஆகியுள்ளார். இதன் காரணமாக தொடர்ந்து வெற்றி மாறனின் விடுதலையில் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை என கூறப்படுகிறது.

viduthalai  movie update..
Author
Chennai, First Published Jan 6, 2022, 4:16 PM IST

கே. சுபாஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான நினைவிருக்கும் வரை படத்தில் சிறு ரோலில் நடித்ததன் மூலம் திரையுலக பயணத்தை துவங்கிய சூரி வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா பிரியராக வந்து பேமஸ் ஆனவர். இதை தொடர்ந்து பல படங்களில் சூரி தோன்றியிருந்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் கோடி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனத்தில் ஆழப்பதிந்து இருந்தார்.

இதன்தொடர்ச்சியாக சிவகார்த்தியேன் - சூரி கூட்டணியில் வெளியான ரஜினி முருகன், சீம ராஜா உள்ளிட்ட படங்கள் சூரியை நல்ல நகைச்சுவை நாயகனாக ரசிகர்கள் மத்தியில் இனம் காண்பித்தது. அண்ணாத்த படத்தை அடுத்து 2022-ல் திரைக்கு வரவுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் நடித்து வரும் சூரி தனது வேறொரு பரிமாணமாக நாயகன் உருவை எடுத்துள்ளார்.

பொல்லாதவன்,  ஆடுகளம், விசாரணை,  வடசென்னை, அசுரன் என மாறுபட்ட கதை களத்தை கொடுத்த  வெற்றி மாறன் தற்போது நடிகர் சூரியை நாயனாக வைத்து படம் இயக்கி வருகிறார். போலீஸ்கரராக சூரி நடித்து வரும் இந்த படமும் ஏழை மக்களின் மீது காவல்துறை நடத்திய வக்கிரமத்தின் சாயலாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

viduthalai  movie update..

விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், இயக்குனர் கவுதம்மேனன் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். அதோடு ஜெய் பீம் படத்தில் கொடூர காவலராக தோன்றி மிரட்டியிருந்த முன்னாள் காவலர் தமிழ் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததோடு காவலராகவும் நடித்துள்ளார். மாறுபட்ட தோற்றத்தில் தோன்றவுள்ள இதன் கதாநாயகி பிரபல இசையமைப்பாளர் ஜீ.வியின் சகோதரி பவானி ஸ்ரீ.

இவர் ஏற்கனவே  விஜய் சேதுபதியின் கா/ பெ ரணசிங்கம், நண்பன் ஒருவன் வந்த பிறகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதல் முறையாக பவானி ஸ்ரீ நாயகியாக நடிக்கும் இந்த படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசை அமைக்கிறார். சத்தியமங்கலம், செங்கல்பட்டு, திண்டுக்கல் என தனது இரண்டு கட்ட படப்பிடிப்புகளை முடித்துள்ள விடுதலைக்கு கலை இயக்குனராக ஜாக்கி பணிபுரிந்து வருகிறார்.

viduthalai  movie update..

கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிந்த பாடில்லை. இதற்கு ஒளிப்பதிவாளர் கிடைக்காததே காரணம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வரும் வேல்ராஜ் ஏற்கனவே இயக்குனர் வெற்றி மாறனின் ஹிட் படைப்புகளான அசுரன்,ஆடுகளம்,வாடா சென்னை உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். அதோடு முந்தைய படங்களின் தொடர்பு மூலம் தனுஷை வைத்து விஐபி, தங்க மகன்  படங்களை இயக்கி வெற்றி பெற்றவர்.

viduthalai  movie update..

இந்நிலையில் விடுதலை படத்தில் பணியாற்றி வருவதற்கு இடையே சரவண ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் படம் உள்ளிட்ட மூவிகளில் வேல்ராஜ் கமிட் ஆகியுள்ளார். இதன் காரணமாக தொடர்ந்து வெற்றி மாறனின் விடுதலையில் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே படம் மூன்று ஆண்டுகளை கடந்தும் படப்பிடிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios