ஷூட்டிங் ஸ்பாட்டில் ரவுண்டு கட்டிய குட்டீஸுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூரி - வைரலாகும் வீடியோ

விடுதலை படத்திற்கு பின்னர் சினிமாவில் பிசியாக நடித்து வரும் சூரி, கிராமத்து சிறுவர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் மகிழ்வித்து மகிழ்ந்த தருணம் குறித்து தற்போது பார்க்கலாம்.

viduthalai actor Soori fullfill the kids wish during shooting in theni gan

தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வந்த நடிகர் சூரி தற்போது பிசியான ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த விடுதலை திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் குமரேசன் என்கிற போலீஸ் கான்ஸ்டபில் ஆக நடித்திருந்தார் சூரி. வழக்கமாக காமெடி வேடங்களில் நடித்து வந்த சூரி, இப்படத்தில் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. இதுதவிர சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்கிற திரைப்படத்திலும் கதையின் நாயகனாக நடித்துள்ளார் சூரி. இப்படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் வினோத் இயக்கி உள்ளார். இதன் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக அமீர் இயக்க உள்ள புதிய படத்திலும் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் சூரி.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதுதவிர துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சூரி. இதில் ரோஷினி, பிரிகிடா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி செம்ம பிசியான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரி, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அது வைரலாகி வருகிறது.

அதன்படி படப்பிடிப்பு ஒன்றிற்காக கிராமத்திற்கு சென்ற சூரி, அங்கு தன்னுடைய கேரவனில் இருந்தபோது அவரை பார்க்க சிறுவர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அனைவரும் சூரியின் கேரவனை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டனர். இதற்கு உடனே அனைவரையும் கேரவனுக்குள் அழைத்து சுற்றிக்காட்டிய சூரி, அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். மகிழ்வித்து மகிழ்ந்த தருணம் என குறிப்பிட்டு சூரி பதிவிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...     வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி..! ஹரோயினாக ரோஷ்னி மற்றும் பிரகிடா? வெளியான போட்டோஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios