தல அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை வித்யாபாலன் காட்சிகள் இன்னும் படமாக்க படவில்லை. அஜித்தின் கோர்ட் காட்சிகள், மற்றும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மூண்டு நடிகைகளுடன் தோன்றும் காட்சிகள் உள்ளிட்ட பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்னும் ஒரிரு நாட்களில் வித்யாபாலன்,படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம். அஜித்துடன் நடிக்க இரண்டு நாட்கள் மட்டுமே வித்யா பாலன் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். இவர் தோன்றும் காட்சிகள் குறைவாக  உள்ளதால் திட்டமிட்டபடி இரண்டு நாட்களில் படக்குழு வித்யாபாலன் காட்சிகளை படமாக்கி முடித்து விடுவார்கள் என கூறப்படுகிறது.

மேலும் அஜித் தோன்றும், அனைத்து காட்சிகளும் ஐதராபாத்தில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மூன்று ஹீரோயின்கள் காட்சிகள் மட்டுமே வெளிப்புறப்படப்பிடிப்பில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று படதரப்பினர் கூறி வருகிறார்கள்.

எச்.வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதாஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை  போனிகபூர் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.