விடாமுயற்சி படத்தின் நாயகன் அஜித், துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் ரெஜினா கசண்ட்ராவும் இதில் முக்கியப் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல் மங்காத்தா படத்துக்கு பின்னர் அஜித்தும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இதனால் விடாமுயற்சி படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிய வண்ணம் உள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. அங்கு சுமார் இரண்டு மாதங்கள் இடைவிடாமல் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் குடும்பத்துடன் துபாய்க்கு சென்றார் அஜித். அங்கு தனது மனைவி ஷாலினி மற்றும் மகன், மகளுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார் ஏகே.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டி உடன் வெளியேறிய போட்டியாளர் இவரா? லீக்கான தகவல்... ஷாக் ஆன ரசிகர்கள்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துபாயில் குடும்பத்துடன் ஜாலியாக கப்பலில் உலா வந்த அஜித்தை பார்த்ததும் ரசிகர்கள் தல, தல என ஆவலோடு கத்தியதை கேட்டு அவர்களுக்கு கப்பலில் இருந்தவாரே அஜித் கையசைத்த வீடியோ ஒன்று நேற்று வெளியாகி வைரலாக பரவியது. இந்த நிலையில், தற்போது அஜித் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Happy New Year 2024 துபாயில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜாலியாக நடனமாடி மகிழ்ந்த நடிகர் Ajith

அதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண் ரசிகையுடன் சேர்ந்து அஜித் நடனமாடியதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதையும் படியுங்கள்... லியோ படத்துக்கு தடை... லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை - வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு