இயக்குனர் பரதன் இயக்கத்தில் 'அழகிய தமிழ்மகன்' படத்திற்கு பிறகு விஜய் மற்றும் கீர்த்திசுரேஷ் நடித்து வரும் 'பைரவா, படம் ,  இந்த வருடம் பொங்கலுக்கு மாஸ் ஓப்பனிங்கில் வெளிவருகிறது.

இந்த படத்திற்கு  ஆதரவாக கீர்த்தியின் அப்பாவான தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மலையாள சினிமாத்துறையில் சதி செய்து வருவதாக தற்போது பல குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள், மல்டிப்ளக்ஸ்களுக்கு வழங்கப்படுவது போல தங்களுக்கும் அதிக பங்கு தரவேண்டும் என கூறி ஸ்ட்ரைக் செய்து வருகின்றனர்.

பொங்கல் வரை அதை நீட்டிக்க திட்டமிட்டு வேலை செய்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் சுரேஷ் குமார் மீது குற்றச்சாட்டு வந்துள்ளது.

போராட்டம் தொடர்ந்தால் வழக்கமாக பைரவா படத்திற்கு கிடைக்கும் தியேட்டர்களை விட கேரளாவில் அதிக  தியேட்டர் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடதக்கது .