தமிழ் சினிமாவை பொறுத்தவை அதிக படியாக தன்னுடைய ஒர்ஜினல் கெட்டப்பை மாற்றி கொள்ளாமல், எதார்த்தமாக நடித்து வருபவர் நடிகர் அஜித். இதனாலேயே இவருக்கு பல ரசிகர்கள்  உள்ளனர். 

ரஜினிகாந்த், முதல் பல நடிகர்கள் வரை, தங்களை இளமையாக கட்டிக்கொள்ள, மேக்அப் மற்றும் தலையில் டை அடித்துக் கொள்ளும் நிலையில்,  அஜித் மட்டும்  வெள்ளை தலைமுடி, தாடியுடன் நடித்து சால்ட் அண்ட் பெப்பர் என புதிய கெட்டப்பை உருவாக்கினார்.  

தற்போது இதே பாணியை பின்பற்ற உள்ளார் நடிகர் விஜய். இவர் நடித்து வரும் படங்களில் தன்னை இளமையாகவே வெளிப்படுத்திக்கொள்ளும் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடிக்கும் 63வது படத்தில், சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து வருகிறார். இதே கெட்டப்பில் சமீபத்தில் துணை இயக்குனர் திருமண நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

விஜய் 63வது படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிப்பதால் அவருக்கு ஆங்காங்கே தெரியும் நரை முடிக்கு கறுப்பு கலர் அடிக்காமல் இயற்கையாக நடிக்க வைத்து வருகிறாராம் அட்லி.

எகனாவே மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய படங்களில் லேசான நரை முடியுடன் விஜய்  நடித்திருந்தாலும் இந்தப்படத்தில் சற்று கூடுதலாகவே சால்ட் அண்ட் பெப்பர் போட்டுருக்கிறாராம் அட்லீ. இதனால் தற்போது இளமை கெட்டப்பெல்லாம் பழசாகி, அஜித் பாணியை பின் பற்றியுள்ளார் விஜய்.