Asianet News TamilAsianet News Tamil

ராத்திரியில் ஒரு கொலை...இருட்டைக் கண்டாலே பயந்து நடுங்கும் காவல்துறை அதிகாரி...

ஒரு சிலருக்கு உயரத்தைப் பார்த்தால் பயம், இன்னும்  சிலருக்கு பள்ளத்தைக்கண்டால்  பயம். சிலருக்குக் கத்தியை பார்த்தால் பயம், இன்னும் சிலருக்கு இரத்தத்தை பார்த்தால் பயம் என பலருக்கு பலவகையான பயம் இருக்கும்.‘V1’ எனப் பெயரிடப்பட்டிருக்கும்  புதிய படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம். துயரம் என்னவென்றால்  அவர் ஒரு போலீஸ்காரர்.

vi film news
Author
Chennai, First Published Jul 16, 2019, 12:27 PM IST

ஒரு சிலருக்கு உயரத்தைப் பார்த்தால் பயம், இன்னும்  சிலருக்கு பள்ளத்தைக்கண்டால்  பயம். சிலருக்குக் கத்தியை பார்த்தால் பயம், இன்னும் சிலருக்கு இரத்தத்தை பார்த்தால் பயம் என பலருக்கு பலவகையான பயம் இருக்கும்.‘V1’ எனப் பெயரிடப்பட்டிருக்கும்  புதிய படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம். துயரம் என்னவென்றால்  அவர் ஒரு போலீஸ்காரர்.vi film news

கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. ‘V1’ என்ற எண்ணை கொண்ட விட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தப்படுகிறான்.இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே ‘V1’ படத்தின்கதை.

இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க விறுவிறுப்பும் காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன்.இவர் பிரபல திரைப்படங்களான வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.மற்றும் இவர் விருதுகள் வாங்கியபல குறும்படங்களை இயக்கியுள்ளார்.vi film news

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மண்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக எல்.சிந்தன் இப்படத்தை வெளியிடுகிறார்.இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார்.மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்டபலர் நடித்துள்ளனர்.விரையில் வெளியாகவுள்ள ‘V1’ படம் முழுவதும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios