veveham new photo release
சிவா இயக்கத்தில், அஜித் மூன்றாவது முறையாக நடித்து வரும் விவேகம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அஜித் ரசிகர்கள், அனைவரும் மே 11 தேதி வெளியாக இருக்கும் விவேகம் படத்தில் டீசருக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே வெளியான முதல் பார்வையை வைத்து மாஸ் காட்டி வரும் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக இயக்குனர் சிவா அஜித் நடித்த பல்வேறு கெட்டப் புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்தார்.
டீசர் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தற்போது, மீண்டும் அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது இதனை அஜித் ரசிகர்கள் பலர் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
