அஜித் ரசிகர்கள் விவேகம் டீசர் வெளிவரும் நாள் தெரிவிக்கப்பட்ட உடனே,  டீசரை எப்படி வைரலாக்குவது, இதற்கு முன்பு சாதனை படைத்த டீசரின் சாதனையை எப்படி முறியடிப்பது என திட்டம் தீட்ட ஆரம்பித்து விட்டனர்.

இதற்காக ஒரு சில விதிமுறைகளை... ட்விட்டர், பேஸ் புக், மற்றும் வாட்ஸ் ஆப்களின் பரவ விட்டனர்.
 
இந்நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அஜித்தின் விவேகம் டீசர் வெளியானதுமே சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.

ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட  ஹாலிவுட் தரத்தில் வெளியான இந்த டீசரின் பார்வையாளர்களின்  இன்னும் முழுதாக விவரம் வெளியாகவில்லை. ஆனால் லைக்ஸில் சாதனை படைத்து வருகிறது.

50 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸ்களை கடந்து கபாலியின் ஒரு மணி நேர 30 நிமிட சாதனையை முறியடித்துள்ளது என கூறப்படுகிறது.