vetrimaran who was whisked by pornography
பிரபல நடிகையின் பாத்ரூம் குளியல் முதல் பூட்டிய அறைக்குள் நடக்கும் புதுமண தம்பதிகளின் தாம்பத்திய உறவு வரையிலான அந்தரங்க விஷயங்களை ரகசிய கேமரா மூலம் சில விஷமிகள் படமாக்கி அதனை யூடியூபில் பதிவேற்றி விடுகின்றனர் என இயக்குனர் வெற்றிமாறன் ஆபாச பட பிரியர்களை வறுத்தெடுத்துள்ளார்.
இதனால் ஏற்படும் பாதிப்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘லென்ஸ்’. ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணன் இயக்கி நடித்துள்ளார். மேலும் ஆனந்த்சாமி, அஸ்வதி லால், மிஷா கோஷல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இதுபற்றி இயக்குநர் ஜெயபிரகாஷ் கூறும்போது, “யாருமே இக்கதையைத் தயாரிக்க முன்வராத நிலையில் எனது வீடு நிலத்தை விற்றுத் தயாரித்தேன்.
சர்வதேச பட விழாக்களில் படம் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றபோதும் ரொக்கப்பரிசு எதுவும் கிடைக்கவில்லை. படத்தைப் பார்க்க வரும்படி பலமுறை விநியோகஸ்தர்களை அழைத்தேன். வருவதாகக் கூறிவிட்டு வராமல் ஏமாற்றிவிட்டார்கள்.

