வெற்றிமாறனும் தனுஷும் இணைந்து மறுபடியும் இணைந்து ‘வட சென்னை 2’ படத்தைத்தான் தரப்போகிறார்கள் என்ற பயத்திலிருந்து தனுஷ் ரசிகர்களை விடுவித்திருக்கிறார் வெற்றிமாறன்.

விமர்சகர்களால் சிறப்பாக சிலாகிக்கப்பட்டு ஓரளவுக்கு நல்ல வசூலை ஈட்டினாலும், நூற்றுக்கணக்கான லெட்டர்பேடு கட்சிகளின் கடும் கண்டனங்களைச் சந்தித்தது வடசென்னை படம். இதனால் இந்தக் கூட்டணி மீண்டும் ‘வடசென்னை 2’வைத்தான் வழங்கப்போகிறது என்ற செய்தியை தனுஷ் ரசிகர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

இந்நிலையில் சற்றுமுன்னர் வெற்றிமாறன் தரப்பிலிருந்து அவசர அவசரமாக வடிவமைக்கப்பட்ட ‘அசுரன்’ பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ். தாணு தயாரிக்கும் இப்படம் குறித்த மற்ற விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

டிசைனில் தனுஷ் ஒரு பக்கா பட்டிக்காட்டானாக காட்டப்பட்டிருப்பதால், அநேகமாக இக்கதை எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி எடுக்கப்படும் படமாகவும் இருக்கலாம்.