Vetri Maaran Dream project Vada Chennai Shooting Starts Today After Long Day

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘வடசென்னை’. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தனுஷ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வந்தார்கள்.

இயக்குனர் வெற்றி மாறனின் கனவு படமான வட சென்னை மிக பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்று மிகவும் நேரம் செலவழித்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். ஆனால் இந்த படத்தை பற்றி பலவதந்திகள் ஆரம்பதிலேருந்தே எதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. 

ஏற்கனவே, இந்த படத்தில் சிம்பு, ராணா நடிப்பதாக இருந்த நிலையில் சிலபல பிரச்சனையின் காரணமாக அப்போதே இந்த படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு தனுஷ் நடிக்க ஒப்பந்தமானார், படபிடிப்பு ஆரம்பித்து குறுகிய காலத்தில் படபிடிப்பு நிறுத்தம் மீண்டும் ஆரம்பிக்க பல நாட்கள். 

பின்னர் சமந்தா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றார். அவருக்கு பதிலாக அமலாபால் ஒப்பந்தமானார். அதற்கு அப்புறம் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகிகொண்டார். இத்தனை பிரச்சனைக்கு பிறகு இந்த படம் மீண்டும் படபிடிப்பு ஆரம்பம் என்று ஒரு சந்தோஷ செய்தி வெளியாகின்றது.

கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அன்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

ஆனால், ‘வடசென்னை’ முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வேலையில்லா பட்டதாரி 2', 'ப.பாண்டி' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் தனுஷ். இதனால் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு எப்போது என்று கேள்வி எழுந்தது.

தற்போது, ''பவர் பாண்டி வெளியான நிலையில், வட சென்னை படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியது. சுட்டெரிக்கும் சூரியன், கடல், பெரிய மனிதர்கள் அப்புறம் வெற்றிமாறனுக்கே உரித்தான படப்பிடிப்பு தளங்கள் என படப்பிடிப்பு நடைபெறுகிறது'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.