"உலக நாயகனை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் வீரப்பன்" - உடல் நலக்குறைவால் காலமானார் - மனம் நொந்து கமல் போட்ட பதிவு
தமிழ் மற்றும் பல இந்திய மொழி திரைப்படங்கள் மற்றும் ஆவண குறும்படங்களை இயக்கி புகழ்பெற்ற மாபெரும் தயாரிப்பாளர் தான் Qube Cinemas நிறுவன தலைவர் அருண் வீரப்பன் அவர்கள். அவர் நேற்று தனது 90வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
அருண் வீரப்பன் திரைப்படத் தயாரிப்பு, ஆவணப்படம் தயாரிப்பு மற்றும் பல சமூக அமைப்புகளிலும் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை தானே ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. AVM மற்றும் ஜெமினி போன்ற நன்கு அறியப்பட்ட ஸ்டுடியோக்களில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றினார் அவர்.
குறிப்பாக உலக நாயகன் கமல் அவர்கள் அறிமுகமான AVM நிறுவனத்தின் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் இவர். கமல்ஹாசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்ததில் இவருக்கும் பெரிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடைய மறைவுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
'களத்தூர் கண்ணமா', 'மைன் சுப் ரஹுங்கி', 'மெஹர்பன்' மற்றும் 'பைசா யா பியார்' போன்ற பல வெற்றிகரமான திரைப்படங்களில் பணியாற்றியவர் வீரப்பன் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ‘ஜமீன் ஆஸ்மான்’, ‘உன்னிடத்தில் நான்’ போன்ற திரைப்படங்களையும், விவசாயம், குழந்தைகள் நலம் மற்றும் பிற சமூகத் தொடர்புடைய விஷயங்கள் தொடர்புடைய 150க்கும் மேற்பட்ட குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களையும் தயாரித்து இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1980களிலேயே சினிமாவில் பல மின்னனு சாதனைகளை பயன்படுத்தி ஒரு புரட்சியை செய்தவர் வீரப்பன் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 3-டியூப் வீடியோ ப்ரொஜெக்டர்கள் மற்றும் VHS டேப் மெஷின்கள் அக்காலத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்பட்ட நிலையில், அவற்றை தனது பணியில் பயன்படுத்தி வெற்றி கண்டவர் அவர்.
தனது 90வது வயதில் இறந்துள்ள அருண் வீரப்பன் பிரபல ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனர் ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும் ஆவர்.