கடந்த 2010 ஆம் ஆண்டு மறைந்த பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாகிருஷ்ணனின் மனைவி, பத்மஜா ராதாகிருஷ்ணன் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

(68) வயதாகும் பத்மஜா திங்கள்கிழமை (நேற்று) திருவனந்தபுரத்தில் காலமானார்.  இவருக்கு திங்கள் கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மூச்சி திணறலால் அவதிப்பட்ட இவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பத்மஜா, ஒரு பாடலாசிரியரும், புகழ்பெற்ற ஓவியரும் ஆவார். அவர் 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான ‘மிஸ்டர்’ படத்திற்கு பாடல் எழுதியிருந்தார். பின்னர், மறைந்த கணவர் இசையமைத்த சில படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். 

பத்மஜா ராதாகிருஷ்ணன் தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் எம்.ஆர்.ராஜகிருஷ்ணன் தற்போது சென்னையிலும், மகள் கார்த்திகா துபாயிலும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.