Asianet News TamilAsianet News Tamil

நெகடிவ் கதாபாத்திரம்.. சக்க போடு போட்ட "ரியல் மார்க் ஆண்டனி" - ரகுவரனுக்கு மெகா ஹிட்டான டாப் 5 படங்கள் இதோ!

Veteran Actor Raghuvaran : தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனை சூப்பர் ஹிட் ஹீரோக்கள் வந்தாலும், அவர்களுக்கு நிகரான வில்லன் அமையும்போது தான் ஹீரோக்களுக்கு மதிப்பு. அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் மிகசிறந்த வில்லனாக வாழ்ந்து மறைந்தவர் தான் ரகுவரன்.

Veteran Kollywood Actor Raghuvaran 16th death anniversary his top 5 movies ans
Author
First Published Mar 19, 2024, 8:27 PM IST

கேரளாவில் பிறந்திருந்தாலும் அதிக அளவிலான தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ரகுவரன் கடந்த 1982 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "ஏழாவது மனிதன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இன்றளவும் ரகுவரனின் குரலை மிமிக்ரி செய்பவர்கள் "ஐ நோ ஐ நோ" என்கின்ற அந்த வசனத்தை பேசாமல் அவருடைய குரலில் மிமிக்ரி செய்வதில்லை. 

அப்படி "ஐ நோ" என்கின்ற அந்த ஒரு வசனத்தை பேசி அனைவரையும் ரகுவரன் மிரட்டிய திரைப்படம் தான் "புரியாத புதிர்". ரகுவரனுக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது அந்த படம். இந்த திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையின் இனிய பயணம் துவங்குகிறது.. இளையராஜாவாக மாறுகிறார் தனுஷ் - இதோ வந்தாச்சு official அப்டேட்!

அதேபோல கடந்த 1994ம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான "காதலன்" என்கின்ற திரைப்படத்தில் வெடிகுண்டு வைக்கும் டெர்ரர் வில்லனாக மல்லிகார்ஜுனா என்கின்ற கதாபாத்திரத்தில் மிக மிக நேர்த்தியான வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார் ரகுவரன். இறுதி வரை ஹீரோவை விடாமல் துரத்தும் அந்த வில்லனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

1995 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் வெற்றி பெற "மாணிக் பாட்ஷா" எந்த அளவுக்கு காரணமோ, அதே அளவிற்கு காரணம் "மார்க் ஆண்டனி" என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்த ரகுவரனும் தான். கூலிங் கண்ணாடி, வாயில் சிகரெட் என்று ஸ்டைலிஷ் வில்லனாக மிக நேர்த்தியாக நடித்திருப்பார்.

அதே 1995 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் அதியமான் இயக்கத்தில் வெளியான "தொட்டா சிணுங்கி என்கின்ற" திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஒரு சைக்கோவாகவே நடித்து மிரட்டி இருப்பார் ரகுவரன். அந்த திரைப்படம் ஒரு வில்லனாக அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. 1999 ஆம் ஆண்டு மீண்டும் சங்கர் இயக்கத்தில் "முதல்வன்" என்கின்ற திரைப்படத்தில் அரங்கநாதன் என்கின்ற கதாபாத்திரத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக அவர் நடித்திருப்பார். 

இன்றளவும் அந்த வில்லன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது என்றால் அது முழுக்க முழுக்க ரகுவரனின் நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றால் அது மிகையல்ல. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் ரகுவரன். 

கடந்த 1982 ஆம் ஆண்டு துவங்கிய அவருடைய கலைப்பயணம் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவு பெற்றது. தமிழில் இறுதியாக கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான "அடடா என்ன அழகு" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் அவர் ஏற்று நடித்திருந்தார். அது அவருடைய இறப்புக்கு பிறகு வெளியான படமாகும். 50 வயதை கூட எட்டாத நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு இதே மார்ச் 19ஆம் தேதி அவர் சென்னையில் காலமானார்.

Samantha Photos: கழுத்தோடு கட்டிய சிறகு போன்ற உடை! நடுவில் கேப்... டாப் கவர்ச்சியில் புகுந்து விளையாடிய சமந்தா

Follow Us:
Download App:
  • android
  • ios