Asianet News TamilAsianet News Tamil

"மனிதகுலத்திற்கு கடவுள் தந்த வரம் ரஜினி".. எக்கச்சக்கமாக புகழ்ந்த மூத்த நடிகர் - எந்த விழாவில் தெரியுமா? Video

Super Star Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு, அவர் மனிதனுக்கு கடவுள் கொடுத்த வரம் என்று கூறியுள்ளார் முத்த நடிகர் ஒருவர்.

veteran bollywood and kollywood actor anupam kher released selfie video with super star rajinikanth ans
Author
First Published Jun 11, 2024, 5:25 PM IST

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்றுக்கொண்டார். தொடர்ச்சியாக மூன்றாவது முறை இந்தியாவை ஆளும் பிரதமராக நரேந்திர மோடி மாறியது அவருடைய கட்சியினரையும், ரசிகர்களையும் மிகப்பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நேற்று மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள தலைவர்கள் அனைவரும் அமைச்சர்களாக தனித்தனி இலாக்காக்களில் பொறுப்பேற்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பதவியேற்பு விழாவில் அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி, பல துறையை சார்ந்த பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Ajith : சூட்டிங் ஸ்பாட்டில் கையை வெட்டிகொண்ட சம்பவம்.. யாருக்கும் தெரியாத அஜீத் குமார் - ஷாலினி லவ் ஸ்டோரி..

குறிப்பாக தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, பாலிவுட் உலகின் ஷாருக்கான், அக்ஷய் குமார், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் மற்றும் அரசியல் தலைவரான சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் பிரபல நடிகர் அனுபம் கீர் அவர்களும் கலந்து கொண்டார். 

பிரபல ஹிந்தி நடிகரான இவர், தமிழிலும் VIP, லிட்டில் ஜான், குற்றப்பத்திரிகை மற்றும் கனெக்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விழா மேடையை நோக்கி அவர் சென்ற பொழுது தன்னுடன் நடந்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு செல்பி வீடியோ ஒன்றை எடுத்த அனுபம் கீர், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனித குலத்திற்கு கடவுள் கொடுத்த ஒரு வரம்" என்று கூறி அவருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார்.

கோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தும் மாஸ் நடிகர்.. இப்போ தல கூட இணைகிறார் - "குட் பேட் அக்லி" நியூ அப்டேட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios