கவர்ச்சியை முற்றிலுமாக தவிர்த்து, குடும்ப பாங்கான பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து புகழ்பெற்ற நடிகைகள் பலர் உண்டு தமிழக சினிமா வரலாற்றில். அதில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு நடிகை தான் சித்தாரா.
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பிறந்த சித்தாரா, தனது பள்ளி படிப்பை கேரளாவில் முடித்து அதன் பிறகு 1986ம் ஆண்டு காவேரி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தவர் சித்தாரா.
புதுப்புது அர்த்தங்கள், புதுப்புது ராகங்கள், புதுவசந்தம், புரியாத புதிர் என்று புதிது புதிதாக பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார், குறிப்பாக இவர் நடிப்பில் 1990ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான புது வசந்தம் என்ற திரைப்படம், இன்றளவும் பார்ப்பதற்கு புதிதாக தோன்றும் திரைப்படங்களில் ஒன்று என்றே கூறலாம்.
ஆரம்ப கட்டத்திலேயே இவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மறுத்ததை அடுத்து, கதாநாயகியாக வெகு சில ஆண்டுகள் மட்டுமே நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக படையப்பா படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பல படங்களில் அக்கா, அம்மா என்று பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் சித்தாரா, இன்றளவும் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்ந்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன பருந்து, காக்கா கதைக்கு அர்த்தம் இதுதானா?.. பற்ற வைத்த புளூ சட்டை மாறன்!
இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் சித்தாரா குறித்து பேசிய பிரபல நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் அவர்கள், திருமணம் செய்து கொள்ளாமல் முதிர்கன்னியாகவே பல ஆண்டுகளாக இருந்து வரும் சித்தாரா, தொடக்க காலத்திலேயே கவர்ச்சியாக நடிப்பதற்கு மறுத்துவிட்டார் அதனால், அவருக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த சூழலில் தான் கேரளாவில் உள்ள ஒரு சாமியார் மீது அதீத பக்தி கொண்டு, இறுதியில் அவர் ஒரு பெண் சாமியாராகவே தற்பொழுது மாறிவிட்டார் என்று கூறியுள்ளார். அண்மை காலங்களாக அவர் படங்கள் நடிக்காததற்கும் அதுதான் காரணம் என்று அவர் ஒரு தகவலை கூறியுள்ளார்.
மேலும் அவர் திருமணம் செய்துகொள்ளாதது குறித்து பேசிய ரங்கநாதன், ஒரு பேட்டியில் சித்தாரா பேசியதை மேற்கோளிட்டு பேசும் பொழுது "அவர் திரையுலகில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் பல ஆண்டுகள் அந்த காதல் கைகூடாமல் இருந்த நிலையில், அதன் பிறகு திருமணம் செய்து கொள்ள அவர் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
