2019ம் ஆண்டு தல அஜித்தின் ஆண்டு என்பது போல ’விஸ்வாசம்’, ’நேர்கொண்ட பார்வை’ என இரண்டு சூப்பர் டூப்பர் படங்கள் திரைக்கு வந்து சாதனை படைத்துள்ளன. தற்போது போனிகபூர் தயாரிப்பில் ”வலிமை” படத்தில் நடிக்க உள்ள அஜித், அதற்காக தனது உடலை வலிமைப்படுத்தும் பணியில் பிசியாக உள்ளார். தல ஒரு காட்சியில் தோன்றினால் கூட அவரை கொண்டாட ரசிகர்கள் பட்டாளம் காத்திருக்கிறது. 

சோசியல் மீடியாவில் அக்கவுண்ட் இல்லாத அஜித் தான், அதிகம் ட்ரெண்டாக்கப்படும் நபராக உள்ளார். அதற்கு காரணம் அவரது ரசிகர்கள் தான், தல என்ன பண்ணாலும் அதை நாங்க வைரலாக்குவோம் என தீயாய் வேலை செய்கின்றனர். தல அஜித்தின் மகன், மகள் புகைப்படங்கள் கூட சமீபத்தில் செம்ம வைரலானது. அஜித்தின் 60வது படத்திற்கான அப்டேட்டிற்காக மொத்த ரசிகர்களும் காத்து கிடக்கின்றனர். ஆனால் படத்தைப் பற்றி எவ்வித அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த சமயத்தில் சத்தமே இல்லாமல் இளம் வயதில் அஜித் செய்த காரியம் ஒன்றை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.

மிக இளம் வயதில் க்யூட்டாக இருக்கும் அஜித் குமார், கிரிக்கெட் ஆடும் புகைப்படம் தான் அது. இதுவரை யாரும் பார்த்திராத அந்த புகைப்படத்தில் அப்பாவியாக தோற்றமளிக்கும் தல, வேட்டை சட்டை அணிந்து கிரிக்கெட் விளையாடுகிறார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் ஷேர் செய்துள்ள தல ரசிகர்கள் #Valimai என்ற ஹேஷ்டேக்குடன் வைரலாக்கி வருகின்றனர்.

 

இதற்கு போட்டியாக தல அஜித் மங்காத்தா பட ஷூட்டிங்கின் போது படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிய போட்டோக்களையும் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அஜித் ரசிகர்கள் என்ன தான் மாத்தி, மாத்தி போட்டி போட்டாலும் ட்ரெண்டிங்கில் இடம் பிடிப்பது என்னமோ நம்ம தல தான்.