இட்ஸ் மை கஸ்டடி.. வெங்கட் பிரபு இயக்கத்தில்... நாக சைதன்யாவின் வெறித்தனமான நடிப்பில் வெளியான 'கஸ்டடி' டீசர்!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா நடித்துள்ள 'கஸ்டடி' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், கடைசியாக வெளியான திரைப்படம் 'மாநாடு' நடிகர் சிம்பு - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, இயக்குனர் வெங்கட் பிரபு யாரை வைத்து படம் இயக்குவார், என எதிர்பார்ப்பு இருந்த நிலையில்... திடீரென பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து திரைப்படம் இயக்க உள்ளதாக அறிவித்தார்.
இதுவரை நாக சைதன்யா நடித்த படங்களிலேயே, அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்ட நிலையில், போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.
இப்படி ஒரு மாஸ் சீனை 'வாத்தி' படத்தில் இருந்து தூக்கிட்டாங்களே..! வெளியான டெலீட்டட் சீன்..!
அதேபோல், இப்படம் வரும் மே 12ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளதாகவும், படக்குழு அறிவித்துள்ளது. நாக சைதன்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அரவிந்த்சாமி வில்லனாக நடித்துள்ளார். 'தனி ஒருவன்' படத்தில் மிகவும் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்திருந்த அரவிந்த்சாமி, இப்படத்தில் பக்கா லோக்கல் வில்லனாக நடித்துள்ளார் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது.
மேலும் இப்படத்தில் ஹீரோயினாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த டீசரில் பெற்றுள்ள வசனம் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது.