vengat prabu tweet issue
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தி கடைசியாக வெளிவந்த "சென்னை 28 " படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றிபெற்றது.
பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படத்தில் 'இதுதாண்டா போலீஸ்' புகழ் டாக்டர் ராஜசேகர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் 'நாளை முதல் வேட்பாளர் அறிமுகம்' என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் இருந்து அவரது அடுத்த படம் அரசியல் படமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ரஜினி உள்பட பல திரையுலக பிரபலங்கள் அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் அரசியல் படமாக இருந்தால் அந்த படம் தற்கால அரசியல் குறித்த காரசாரமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
