இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 28  படத்தின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து  டைரக்ட் செய்துள்ள திரைப்படம் 'பார்ட்டி'.

இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர். 'யு ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

மேலும் இந்த படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கூறுகையில்,  இது அனைவரும் பார்த்து மகிழும் ஒரு அழகான பொழுதுபோக்கு விழாவாக இருக்கும் என்கிறார். 

அதே போல் படத்தின் தயாரிப்பாளர்  டி.சிவா கூறும்போது, ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கதை நடக்கிறது படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளனர். அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் நகைச்சுவை கலந்த படம் இது.  புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்தது என்ன என்பதை சஸ்பென்ஸாக கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு என தெரிவித்துள்ளார். 

நடிகர் சத்யராஜ்,  ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், சம்பத்ராஜ், ரெஜினா கஸன்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி, ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.  பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கனவே ஒரு முழுமையான பார்ட்டி உணர்வை, உருவாக்கி இருக்கிறது. இந்த படத்தின்  சில முக்கிய காட்சிகள் பிஜி தீவுகளில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.