சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'காலா' படத்தில்....  வேங்கமகன் ஒத்தையில நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்கலே... என்று ரஜினிகாந்த் குடை சண்டை போடும் போது பேசும் டயலாக் பலராலும் ரசிக்கப்பட்டது.

தற்போது இந்த டயலாக்கைப் பக்கவாக கேச் செய்து, ஹிப் ஹாப் தமிழா ஆதி, நடித்துள்ள நட்பே துணை படத்தில் ஒரு பாடல் வைத்துள்ளார்.

வேங்கமகன் ஒத்தையில நிக்க மொத்தமா வராங்களே என்று அந்த பாடல் தொடங்குகிறது. இந்த பாடலின் லிரிக் வீடியோவை தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப்பாடலை சின்னப்பொண்ணு மற்றும் ஹிப்ஹாப் ஆதி இணைந்து பாடி உள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர், போர்வல் சாங் வெளியாகி ஹிட்டடித்த நிலையில், இந்த பாடலும் வைரலாகிக்கொண்டிருக்கிறது.