தமிழகம் மாவீரனாக போற்றும் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில், ஆங்கிலேயன், ஜாக்சன் துரையாக நடித்து, அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர் சி.ஆர்.பார்த்திபன் இன்று காலமானார்.
தமிழகம் மாவீரனாக போற்றும் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில், ஆங்கிலேயன், ஜாக்சன் துரையாக நடித்து, அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர் சி.ஆர்.பார்த்திபன் இன்று காலமானார்.
90 வயதாகும் இவர், வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்தவர்கள், மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
வேலூரை சேர்ந்த, சி.ஆர்.பார்த்திபன், பட்ட படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்து, எதேர்ச்சியாக கிடைத்தது தான் ஹிந்தி பட சினிமா வாய்ப்பு. ஹிந்தியில் தான் அவர் அறிமுகமும் ஆனார். இதன் பின்னரே, தமிழில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் இல்லாமல் இருந்த இவர், இன்று காலமாகியுள்ளார். பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 25, 2021, 7:42 PM IST