Asianet News TamilAsianet News Tamil

அச்சச்சோ... வீரம் பட நடிகரின் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா- ஒரே நேரத்தில் 11 பேருக்கு தொற்று உறுதி

பிரபல நடிகரின் குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது, தமிழ் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Veeram movie Actor Vidharth family members tested positive for corona
Author
Tamil Nadu, First Published Jan 13, 2022, 9:37 AM IST

2001-ல், மாதவன் நடித்து சூப்பர் ஹிட் ஆன 'மின்னலே ' படத்தின் மூலம், துணை நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் வித்தார்த். இந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் துணை நடிகராக நடித்தார். 

சுமார் பத்து வருட போராட்டத்திற்கு பின் 2010 ஆம் ஆண்டு இயக்குனர்  பிரபு சாலமன் இயக்கிய 'மைனா' படத்தின் மூலம், கதாநாயகனாக  அறிமுகமானார். இதையடுத்து அஜித்தின் வீரம் முதல் அண்மையில் வெளியான அன்பறிவு வரை முக்கியத்துவம் வாய்ந்த குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார் வித்தார்த்.

Veeram movie Actor Vidharth family members tested positive for corona

அந்த வகையில் இவர் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு, குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை, காற்றின் மொழி போன்ற படங்கள் பல்வேறு விருதுகளை பெற்றன. இவர் கதையின் நாயகனாக நடித்துள்ள கார்பன் என்கிற திரைப்படம் இன்று ரிலீசாகி உள்ளது. இத்தகையை உற்சாகமான தருணத்தை கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார் வித்தார்த்.

ஏனெனில், இவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம். ஒரே நேரத்தில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒரு சிலர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டும், மீதமுள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தமிழ் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios