திருமணத்தை தொடர்ந்து 'அகம்பாவம்' படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகவுள்ள நடிகை நமீதாவிற்கு ஜோடியாக எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என அவருடைய கணவர் வீரா அசத்தலான பதில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் நடித்த, 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நமீதா. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், என அனைத்து மொழி படங்களிலும் பிஸியான நடிகையாக மாறினார்.

குறுகிய காலத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்களை பெற்ற நமீதா,  திடீரென உடல் எடை அதிகரித்ததால் ஒரேயடியாக அனைத்து திரையுலகில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டார்.

வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காததால்,  சின்னத்திரைக்கு தாவினார். பிரபல  தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  டான்ஸ் நிகழ்ச்சியில்  நடுவராக சில காலம் இருந்தார்.

பின் உடல் எடையை குறைத்து  மலையாளத்தில் மோகன்லால் நடித்த, புலி முருகன் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து சினிமாவில் நீடிக்கலாம் என கனவு கண்ட நமிதாவின் ஆசையை நிறைவேற்றாமல் செய்துவிட்டது பிக் பாஸ் என்ட்ரி. 

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில எதிர்மறையான விமர்சனங்களை நமீதா பெற்றதால் மக்களின் ஆதரவு குறைந்து வெளியேற்றப்பட்டார்.

வெளியேறிய சில வாரங்களிலேயே, இவருடன் 'மியா' படத்தில் நடித்த தயாரிப்பாளரும் நடிகருமான வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக திடீர் என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது மீண்டும் 'அகம்பாவம்' நடிக்க உள்ளார். இந்நிலையில் இவரின் கணவர் வீராவிடம், நிகழ்ச்சி ஒன்றில், உங்கள் மனைவி நமிதாவிற்கு எந்த ஹீரோ ஜோடி சேர்ந்தால் நன்றாக இருக்கும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு.  நமீதாவுக்கு அஜித் மற்றும் பிரபாஸ் இவர்கள் இருவர்தான் சிறந்த தேர்வு என்றும் கூல்லாக பதில் கூறியுள்ளார்.