பிரபல பாலிவுட் நடிகர் சுஷாத் சிங் கடந்த வாரம் ஞாயிற்று கிழமை அன்று, பாந்தாராவில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 34 வயதே ஆகும் திறமை மிகுந்த ஒரு நடிகரை பாலிவுட் திரையுலகம் இழந்து விட்டது என பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வந்தனர்.

இவருடைய இறப்பிற்கான காரணம் மன அழுத்தம் தான் என கூறப்பட்டது. அதே போல் சுஷாந்த் சிங், தூக்கு போட்டு கொண்டதால் தான் மூச்சு திணறி உயிரிழந்தார் என்பதும் அவருடைய, பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

சுஷாந்த் சிங்கின் இந்த, மன உளைச்சலுக்கு காரணம், பாலிவுட் திரையுலகில் உள்ள முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்தது. குறிப்பாக, சுஷாந்த் முன்னணி நடிகராக வளர்ந்து வருவது பிடிக்காமல், கடந்த 6 மாதத்தில் மட்டும் 7 பட வாய்ப்புகள் இவர் கையில் இருந்து நழுவியதன் காரணமாகவே சுஷாந்த் சிங்கின் மன உளைச்சல் அதிகரித்ததாகவும் கூறப்பட்டது.

மேலும், முன்னணி பிரபலங்கள், நடிகர் நடிகைகள் பலர், சுஷாந்த் சிங் வளர்ச்சி பிடிக்காமல் அவரை பேட்டிகளிலும், மேடைகளிலும் அசிங்கப்படுத்திய வீடியோக்களை எடுத்து போட்டு, அநியாயமாக ஒரு திறமையான நடிகரை சாகடித்துவிட்டீர்களே என சமூக வலைத்தளத்தில் குமுறி வருகிறார்கள் சுஷாந்தின் ரசிகர்கள். 

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகள் வாசுகி பாஸ்கர், ஒவ்வொரு நடிகரும் இது போன்ற பிரச்சனைகளை கடந்து தான் வரவேண்டும் என்பது போல் ட்விட் செய்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், பாலிவுட்டில் இருக்கும் சுஷாந்த் சிங் போல் தமிழ் சினிமாவிலும் ஒதுக்கப்படும் பலர் உள்ளனர் என்றும் அவர்களில் சிலர் என்னிடம் வருத்தப்படுவார்கள் என்றும் சிலர் அமைதியாக சிரித்துக் கொண்டே புறக்கணிப்பின் வலியை கடந்து செல்வார்கள் என்றும் வாசுகி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இப்படி புறக்கணிக்கும் போது, தல அஜித்தை கொஞ்சம் நினைத்து பாருங்கள், அவர் இது போன்ற பல, பிரச்சனைகளை கடந்து தான் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் என வாசுகி பாஸ்கர் கூறியுள்ளார். வாசுகி பாஸ்கரின் இந்த டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.