சூப்பர் ஸ்டார் ரஜினிக்காத ட்விட்டர் பக்கத்தில் வசந்தகுமாருக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவை எதிர்த்து போராடும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பாகுபாடு இன்றி கொரோனா தொற்று விட்டுவைக்கவில்லை. அந்த வகையில் ஏற்கனவே திமுகவை சேர்ந்த அன்பழகன், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி உள்ளிட்டோர் கொரோனா பாதித்து உயிரிழந்தனர்.

அந்தவகையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கடந்த 10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடைய மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இதையடுத்து கடந்த சில நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் எம்.பி.க்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வந்தனாகவும், அதே நேரத்தில் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை 6.56 மணி அளவில் எச்.வசந்தகுமார் (70) உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், கொரோனா தீவிரம் காரணமாக வசந்தகுமார் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளனர். உயர்தர சிகிச்சைகள் கொடுத்ததும், சிகிச்சை பலனின்றி வசந்தகுமார் எம்.பி.உயிரிழந்தார்.

இந்நிலையில், இவருடைய மறைவுக்கு, பிரதமர், முதலமைச்சர், அரசியல் பிரமுகர்கள், மற்றும் பிரபலங்கள் என மாறி மாறி பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிக்காத ட்விட்டர் பக்கத்தில் வசந்தகுமாருக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்". என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…