நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் வெளிநாட்டு உரிமையை தொடர்ந்து சில முன்னணி நிறுவனங்கள் கைப்பற்றி வரும் நிலையில், தற்போது UK வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நிறுவனம் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தளபதி விஜய்க்கு இந்தியா மற்றும் இன்றி, வெளிநாடுகளிலும் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், இரவு பகல் பாராமல்...இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளை நிறைவு செய்து, அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, 'வாரிசு' திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
இந்த பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகளும், விற்பனையும் சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே வாரிசு படத்தின் தமிழக உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ வாங்கியுள்ள நிலையில், உதயநிதியின் ரெட் ஜெயின் மூவிஸுடன் இணைந்து தமிழகத்தில் படத்தை வெளியிட உள்ளது.

மேலும் இப்படத்தின் வெளிநாட்டு உரிமைகளும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 'வாரிசு' படத்தின் UK விநியோக உரிமையை... அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள 'வாரிசு' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நேஷ்னல் கிரிஷ் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சரத்குமார், சங்கீதா, பிரபு, குஷ்பூ, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்ப செண்டிமெண்ட், காதல், ஆக்ஷன் என ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ளது 'வாரிசு'.
