கோலிவுட் திரையுலகில் கடந்த வருடம் மட்டும் அதிக பட்சமாக 5 படங்களில் நடித்து, திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார் நடிகை வரலட்சுமி. 

கோலிவுட் திரையுலகில் கடந்த வருடம் மட்டும் அதிக பட்சமாக 5 படங்களில் நடித்து, திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார் நடிகை வரலட்சுமி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான 'சர்கார்', , 'சண்டக்கோழி 2', ஆகிய படங்களில் கதாநாயகி கீர்த்தி சுரேஷை விட இவருடைய நடிப்பு தான் அதிகம் பேசப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது அடுத்த படியாக வரலட்சுமி, நடிகை ஹன்சிகாவுடன் மோத தயாராகி விட்டார். ஹன்சிகா ஹீரோயினியாக நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வரலட்சுமி. 

சந்தீப் கிஷான், ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் இந்த படத்திற்கு 'தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர ரெட்டி இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த திரைப்படம் வரலட்சுமியின் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.