வரும்  23 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் நடைபெற உள்ள இந்த தருணத்தில் விஷாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, உன் மேல இருந்த கொஞ்ச நெஞ்சம் மரியாதையை கூட கெடுத்துக்கொண்டாய் என  வாட்டி வதைத்து ஒரு அறிக்கையை  தனது ட்விட்டர்  பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் வரலக்ஷ்மி 

நடிகர் விஷால் நேற்று சங்கரதாஸ் சுவாமிகள் அணி அதாவது விஷால் தலைமையிலான பாண்டவர் அணிக்கு எதிராக களமிறங்கியுள்ள பாக்யராஜ் அணியான சங்கரதாஸ் சுவாமிகள் அணிக்கு கொஞ்சம் டஃ ப்  கொடுக்கும் வகையிலும், குறிப்பாக ராதாரவி மற்றும் நடிகர் சரத்குமார் பற்றி அந்த வீடியோவில் நெகட்டிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நில அபகரிப்பு முதல் ஓய்வூதியம் திட்டமில்லாதது வரை ஒவ்வொன்றாக பாயிண்ட் பாயிண்டாக விளக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. நடிகர் விஷால் தலைமையிலான அணி, "சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு எதிராக ஏற்கனவே பாண்டவர் அணி உருவாக்கப்பட்டு தேர்தலை சந்தித்து வெற்றியும் பெற்றனர்.

 

அதில், முறையான ஓய்வு ஊதியம், உறுப்பினர்களுக்கு காப்பீட்டு வசதி என அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் பழமை மிக்க புகழ் கொண்ட இந்த சங்கம் இருந்தது. இதை தவிர சங்கத்தின் நிலத்தையும் தனியாருக்கு தாரை வார்த்தனர். இந்த நிலையில்தான் சங்கத்தையும் அதன் பெருமைகளையும் மீட்டெடுக்க நாசர் தலைமையிலான உருவாக்கப்பட்டது என விவரித்து உள்ளனர். 

இந்த நிலையில் மீண்டும் வரும் 23 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளதால் பாண்டவர் அணிக்கு எதிராக பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணி களத்தில் இறங்கியுள்ளது. பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் ஸ்வாமிகள் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது என விமர்சனங்களும் ஒருபக்கம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஷால் இப்படி ஒரு வீடியோவை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவருடைய நெருங்கிய தோழியாக இருந்த சரத்குமாரின் மகள் வரலட்சுமி இன்று ஒரு அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த கண்டன அறிக்கையில் "உன் மீது வைத்திருந்த கொஞ்சநெஞ்சம் மரியாதையை கூட கெடுத்துக்கொண்டாய் கடைசியில் என்னுடைய ஓட்டும் இழந்தாய்... இந்த அளவிற்கு நீ இருப்பாய் என எதிர்பார்க்கவில்லை. நீ ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்து விட்டாய்... அதுவும் ஆப் ஸ்கிரீன்ல..." என நக்கலாகவும் பதிவிட்டுள்ளார். 

தற்போது இந்த விவகாரம் தமிழ் திரை உலகில் சூடுபிடித்து உள்ளது. மேலும் சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு எதிராக விஷால் எவ்வளவு செய்தாலும் ஒரு நல்ல தோழியாக இருந்து வந்த வரலட்சுமி தற்போது இந்த அளவிற்கு மனம் உடைந்து விஷாலை தூக்கி எறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.