பிரபல நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

ஆரம்பத்தில் தடுப்பூசி மீது மக்களுக்கு இருந்த அச்சம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என்ற கருத்துக்கள் பரவின. கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்காகவும், மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாகவும், இன்று காலை பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்திக் கொண்டார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை போட்டுக்கொண்டார். இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கும் முற்று புள்ளி வைத்தார் மோடி.

இந்நிலையில், தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார்... தன்னுடைய அம்மா கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டபோது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டாச்சு என இவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…