- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கொளுத்திப்போடும் சிந்தாமணி... ரோகிணியின் அடுத்த மூவ் என்ன? சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட் வெயிட்டிங்
கொளுத்திப்போடும் சிந்தாமணி... ரோகிணியின் அடுத்த மூவ் என்ன? சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட் வெயிட்டிங்
சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகிணி பற்றி முத்துவிடம் பேசும் வித்யா, அவள் ரொம்ப ஆபத்தானவள் என பில்டப் கொடுத்து பேசுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை தெரிந்திருந்தும் அதை சொல்லாமல் மூடி மறைத்த மீனா மீது கோபத்தில் இருந்த முத்துவிடம் வித்யாவும் அவரது கணவர் முருகனும் சந்தித்து பேசுகின்றனர். அப்போது வித்யாவை திட்டும் முத்து, நீயும் ஒரு கூட்டுக் களவாணி தான என திட்ட, அதற்கு வித்யா, நான் செஞ்சது தப்பு தான். ஆனால் அந்த ரோகிணியை தப்புக் கணக்கு போடாதீங்க என சொல்கிறார். இவ்வளவு நாள் மீனா உங்களிடம் ரோகிணி பற்றிய உண்மையை மறைச்சதுக்கு முக்கிய காரணம் இருக்கு. அவங்க கிரிஷுக்காக தான் உண்மையை சொல்லாம மறைச்சாங்க என சொல்கிறார்.
ரோகிணி பற்றி வித்யா சொன்ன பகீர் விஷயம்
சரி இப்போ உண்மை தெரிஞ்சிடுச்சு ஏன் பார்லர் அம்மா தற்கொலை பண்ணல என முத்து, வித்யாவிடம் கேட்கிறார். அதற்கு அவர், அவள் ஒரு ஒட்டுன்னு மாதிரி, அவளுக்கு ஏதாச்சும் சப்போர்ட் கிடைச்சா அதை வச்சிக்கிட்டு என்ன வேண்டுமானாலும் செய்வாள். என்னோட கணிப்பு சரியாக இருந்தால், அவளுக்கு யாரோ உதவிக்கிட்டு இருக்காங்க என சொல்கிறாள். அதுமட்டுமின்றி, ரோகிணி ரொம்ப ஆபத்தானவள், அவளுக்கு சின்னதா ஒரு லூப் ஹோல் கிடைச்சாலும் போதும் என பில்டப் கொடுக்கிறார். அதற்கு முத்து, பார்லர் அம்மாவை விட எங்க அம்மா உஷார் ஆனவங்க என கூறுகிறார்.
சிந்தாமணி போடும் பிளான்
இதையடுத்து ரோகிணியை தன்னுடைய தனி வீடு ஒன்றிற்கு அழைத்து செல்லும் சிந்தாமணி, அங்கு அவளை தங்கிக் கொள்ளுமாறு கூறுகிறார். அதுமட்டுமின்றி அவருக்கு ஒரு ஐடியாவும் கொடுக்கிறார். உங்க வீட்டில் என்ன நடக்குதுனு தெரியல, அதனால் நான் நாளைக்கு அங்கு போறேன், அப்போது நீயும் அங்கே வா என சொல்ல, அய்யய்யோ நான் வந்தா பிரச்சனை பண்ணுவாங்க என ரோகிணி சொல்ல, பிரச்சனை வரணும், அதுக்கு தான் நீ அங்க வரணும் என சொல்லும் சிந்தாமணி, நீ உன்னோட துணியை எடுக்க வந்தேன்னு சொல்லு அப்போ உங்க மாமியார் விஜயா உன்னை திட்டுவார். அதை நான் வீடியோ எடுத்துவிடுகிறேன் என கூறுகிறார் சிந்தாமணி. நாளைக்கே, அவங்க டைவர்ஸ் கேட்டு கோர்ட்டு, கேஸ்னு போனா நமக்கு அந்த வீடியோ யூஸ் ஆகும் என சொல்கிறார் சிந்தாமணி.
விஜயா எடுத்த முடிவு
பின்னர் மீனா, முத்துவுடன் வீட்டுக்கு வருகிறார். அப்போது அவரை திட்டுகிறார் விஜயா. உடனே குறுக்கிடும் ஸ்ருதி, மீனா மயக்கம் போட்ட விஷயத்தை சொல்ல, அதெல்லாம் டிராமா என்று கூறுகிறார் விஜயா, அதுமட்டுமின்றி இவ எப்போ இந்த வீட்டுக்குள்ள வந்தாலோ அப்பவே இந்த வீட்டுக்கு தரித்திரம் புடிச்சிருச்சு என சொல்ல, உடனே எதிர்த்து பேசும் மீனா நானா ரோகிணியை இங்க கூட்டிட்டு வந்தேன். நீங்க தான் கூட்டிட்டு வந்தீங்க என சொல்ல, நீ வந்த நேரம் தான் இந்த வீட்டில் இப்படியெல்லாம் நடக்குது என பிரச்சனை பண்ணுகிறார் விஜயா. அதுமட்டுமின்றி ரோகிணிக்கும், மனோஜுக்கும் விவாகரத்து வாங்க உள்ளதாக சொல்கிறார். அதோடு நன்கு விசாரித்து வேறு ஒரு நல்ல பொண்ணா பார்த்து மனோஜுக்கு கல்யாணம் பண்ணுவேன் என சொல்கிறார் விஜயா. இதையடுத்து என்ன நடந்தது? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

