இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது, நடிகர் விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபஸ்ட் லுக் பிரச்சனை தற்போது அரசியல் வாதிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

நேற்றைய தினம் கூட நடிகர் சிம்பு மற்றும் அவருடைய தந்தை டி.ராஜேந்தர் ஆகியோர், நடிகர் விஜய்க்கு ஆதரவு  தெரிவிக்கும் விதத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது குறிப்பிட்ட இந்த காட்சி குறித்து பிரபல அரசியல் தலைவருடன் நேரடியாக விவாதிக்கவும் தயார் என கூறியிருந்தார்.

 

படப்பிடிப்பு:

தற்போது 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு ஈசிஆரில் அமைந்துள்ள தனியார் பிலிம்சிட்டியில், செட் அமைக்கப்பட்டு மிகவும் பிரமாண்டமாக  நடைபெற்று வருகிறது.

நடிகை வரலட்சுமி:

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, விஜய் கையில் குடை பிடித்துக்கொண்டும் , பாக்கெட்டில் கை வைத்துக்கொண்டும் சாதரணமாக நிற்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜயின் காதில் ஒரு கடுக்கனும் உள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, ஷூட்டிங் முடிந்து இடைவெளியில் விஜய் அடுத்த ஷாட்டுக்கு தயாராகும் முன் எடுக்கப்பட்டது போல் உள்ளது. 

மேலும் இந்த புகைப்படத்தை 'விஜய்யின் அனுமதியோடு தான் வெளியிட்டதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார். 

வைரலாக பரவி வரும் விஜய்யின் புகைப்படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.