varalakshmi sarathkumar emotional speech

நடிகர் சிபிராஜ், நடித்து தயாரித்துள்ள திரைப்படம் சத்யா. இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் விமர்சனங்களும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் இந்தப் படத்தின் நாயகன் சிபிராஜ் , நாயகிகள் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார். மற்றும் படக்குழுவை சேர்த்த அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில் சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களைக் கொடுத்த அனைத்து பத்திரிகையாளர், தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி.

சேவ் சக்தி அமைப்பு விஷயமாகதான் நான் முதல்வரை சந்தித்தேன். நான் அரசியலில் இணைய ப்போகிறேனா என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும் போது அதைப் பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன். என்னுடைய தந்தையின் பார்டியில் கூட நான் இணையவில்லை. நான் இப்போதைக்கு சத்யா சக்சஸ் பார்டியில் தான் உள்ளேன் என்று கூறினார். 

மேலும் இந்த வருடத்தில் விக்ரம் வேதா , சத்யா என எனக்கு இரண்டு வெற்றிப் படங்கள் அமைந்தது மகிழ்ச்சி என மிகவும் சந்தோஷமாகக் கூறினார்.