சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து நடித்துவரும், வரலட்சுமி விஷால் நடிக்கும் சண்டக்கோழி- 2 படத்திலும் நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்களிலுமே  கீர்த்தி சுரேஷ் நடிக்கும் நிலையில், இரண்டிலுமே வரலட்சுமியே வில்லியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. "சர்கார்" திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் அதற்கு முன்பாக சண்டக்கோழி 2 அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகிறது.

வழக்கமாக ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி தனது படங்கள் குறித்த அப்டேட்டுகளை அவ்வப்போது தெரிவித்துவருவார். அப்படியான அவரது ட்விட்டர் களமாடலில் சண்டக்கோழி-2வில் அவர் நடிக்கவுள்ள கதாபாத்திரத்தின் பெயர் வந்து விழுந்துள்ளது.

அதன்படி இப்படத்தில் "பேச்சி" எனும் கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பதாகக் கூறியுள்ளார் வரலட்சுமி சரத்குமார். சர்கார் குறித்த ரகசியங்களை படக்குழு வெளியிடக்கூடாது என ஏ.ஆர்.முருகதாஸ் கட்டளை பிறப்பித்ததாலோ என்னவோஅந்தப் படத்தின் தனது  கேரக்டர் குறித்த ரகசியத்தை இன்னும் வெளியிடாமல் உள்ளார் வரலக்ஷ்மி.