கொரோனா வைரஸ், தாக்குதல் காரணமாக கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு தற்போது வரை நீடித்து வருகிறது. குறிப்பாக, நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், இன்னும் சில நாட்கள் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்கிற சந்தேகமும் மக்கள் மத்தியில் உள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, அணைத்து திரைப்பட பணிகள், மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டது. எனவே தற்போது வரை திரையிட தயாராக இருந்த படங்களின் ரிலீஸ் ஆகாமலேயே உள்ளது. கொரோனா பிரச்சனைகள் முடிவுக்கு வந்த பின்னரே திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கடுகிறது.

 சில படங்களை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி தளத்தில், தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஏற்கனவே ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘பெங்குவின்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால், கலவையான விமர்சனங்களையே இந்த படங்கள் பெற்றன.

இந்த நிலையில் ஜோதிகா, கீர்த்தி சுரேஷை அடுத்து வரலட்சுமி நடித்துள்ள ’டேனி என்ற திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரலட்சுமி நடித்துள்ள ‘டேனி’ திரைப்படம் ஜீ தளத்தில் ஆக உள்ளதாகவும் இன்னும் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை சாந்தமூர்த்தி என்பவர் இயக்கி உள்ளார். ஒரு கொலைக்கு காரணமான மூன்று கொலைகாரர்களை போலீஸ் அதிகாரி வரலட்சுமி கண்டுபிடிப்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்தில் டேனி என்ற ஒரு நாய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது