சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மலையாள ரீமேக் படத்தை இயக்க திட்டமிட்ட சமுத்திரக்கனி, தன்னுடைய கேரக்டருக்கு ஜெயராமையும், நாயகியாக வரலட்சுமியையும் தேர்வு செய்தார். 

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தபோது அதில் வரலட்சுமியும் கலந்து கொண்டார்.
 
'ஆகாச மிட்டாய்' என்ற தலைப்பில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக நடிகை வரலட்சுமி அறிவித்துள்ளார். 

மேலும் ஆணாதிக்கம் மற்றும் நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் தன்னால் பணியாற்ற முடியாது, தன்னுடைய இந்த முடிவுக்கு ஆதரவாக இருந்த சமுத்திரக்கனி மற்றும் ஜெயராம் ஆகியோர்களுக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் வரலட்சுமி குறிப்பிட்டுள்ள ஆணாதிக்கம் மற்றும் நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்கள் யாராக இருக்கும் என்று சமூக வலைத்தளத்தில் பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது.