varalakshmi acting sister for vishal
நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலட்சுமி இருவரும் முன்னர் காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. இந் நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இவர்களுடைய காதல் முறிவுக்குப் பின் இருவரும் இணைத்து எந்த ஒரு விழா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஷால் நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சண்டைக் கோழி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.
மேலும் இதே படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமியும் நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. தற்போது இவருடைய கதாபாத்திரம் பற்றி வெளியாகியுள்ள தகவலின் படி விஷாலுக்கு அண்ணியாக நடிக்கிறாராம் வரலட்சுமி.
தற்போது இவருடைய கதாபாத்திரத்தை உறுதிப் படுத்தும் வகையில், இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், இவர் திருமணமான பெண் போன்று படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
