varalakshi create new sangam
சமீபத்தில் நடிகை பாவனா காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் இந்திய திரையுலகினர் அனைவரையும் அதிர்சிக்குள்ளாகியது.
மேலும் நடிகைகளுக்கு திரையுலகிலும், திரையுலகிற்கு வெளியேயும் பல்வேறு விதமான பாலியல் தொல்லைகள் ஏற்படுவதை தடுக்க நடிகைகளின் பாதுகாப்புக்கு என புதிதாக சங்கம் தொடங்கப்படும் என்று பிரபல நடிகையும், முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி கூறியுள்ளார்.
இந்த சங்கம் உலக மகளிர் தினமான மார்ச் 8ல் தொடங்கப்படும் என்றும் இந்த சங்கம் குறித்த முழுவிபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வரலட்சுமியும் முன்னணி தொலைக்காட்சி அதிகாரியால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.
