பிக்பாஸ் இல்லத்தில் குடும்ப அங்கத்தினர்களுள் ஒருவராக இருந்த அழிச்சாட்டியம் செய்த, குறிப்பாக கவின் லாஸ்லியா காதலுக்கு எதிராக பல சதிகள் செய்த வனிதா விஜய் குமார், வீட்டை விட்டு வெளியே கவின் எடுத்த முடிவுக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் சல்யூட் அடித்திருக்கிறார். அத்தோடு லாஸ்லியாவும் நல்ல பெண் தான் என்று திடீர் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்.

பிக்பாஸ் இல்லத்தில் குடும்ப அங்கத்தினர்களுள் ஒருவராக இருந்தபோதும் தலைவி பதவி வகித்தபோதும் கவினையும் லாஸ்லியாவையும் கழுவிக் கழுவி ஊற்றிவந்தவர் வனிதா விஜயகுமார் என்பது ஊரறிந்த விஷயம். இந்நிலையில் கவின் சரியான சமயத்தில் வெளியேறிவிட்டதாகக் கருதி அவரை புகழ்ந்து ட்விட் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார் வனிதா விஜயகுமார்.

அதில், ...கவினுக்கு சல்யூட். அவன் இந்த வாய்ப்பிற்காகக் காத்துக் கொண்டிருந்துள்ளான். இதற்கான எந்தவொரு ரூலையும் பிரேக் செய்யவில்லை. டிராமா போடவில்லை என கூறி கவின் ஆர்மி என்னும் ஹேஸ்டேக் போட்டுள்ளார்.மேலும் லாஸ்லியா குறித்த மற்றொரு பதிவில், ...என்னுடைய ஓட்டு லாஸ்லியாவுக்கு தான்.  இது என்னுடைய நேர்மையான தனிப்பட்ட விருப்பம். அவள் ஒரு டார்லிங்,  எனக்கு யாரும் மீதும் எந்த வஞ்சமும் இல்லை.  மற்றவர்களை ஒப்பிடும்போது அவர்தான் என்னுடைய சிறந்த தேர்வு என்று பதிவிட்டுள்ளார்.வனிதாவின் பதிவை கண்ட கவின் - லாஸ்லியா ஆர்மியினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அவர்களுக்கு விளக்கம் அளித்திருக்கும் இன்னொரு பதிவில் துவக்கத்தில் நான் லாஸ்லியா குறித்து தவறாகப் புரிந்துகொண்டிருந்தேன். எனது இரண்டாவது எண்ட்ரியின் போது லாஸ்லியாவை தொடர்ந்து கவனித்து வந்த வகையில் அவர் ஒரு நல்ல பெண் தான் என்பதைப் புரிந்துகொண்டேன். எனவே கவின்,லாஸ்லியா ஆர்மியினர் எனது பதிவுகள் குறித்து எவ்வித குழப்பங்களுக்கும் ஆளாக வேண்டாம் என்றும் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்.