போலீஸ் - திருடன் டாஸ்கில் விளையாடி வரும் போட்டியாளர்கள் அவ்வப்போது ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்..இவர்களில் வனிதா கொஞ்சம் தாராளமான வார்த்தைகளையே பயன்படுத்தி வருகிறார்..
தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
சென்ற வார எவிக்ஷனுக்காக நிரூப், சினேகன், அனிதா, சுருதி, ஜூலி, வனிதா, சுரேஷ், அபிநய் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

இதில் நிரூப், சினேகன், அனிதா, சுருதி, ஜூலி, அபிநய் ஆகியோர் முதலில் காப்பாற்றப்படுகின்றனர். இறுதியில் வனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே குறைவான வாக்குகளை பெற்றதன் காரணமாக சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் போலீஸ் - திருடன் டாஸ்கில் விளையாடி வரும் போட்டியாளர்கள் அவ்வப்போது ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்..இவர்களில் வனிதா கொஞ்சம் தாராளமான வார்த்தைகளையே பயன்படுத்தி வருகிறார்.. இந்த ப்ரோமோவில் ஷாரிக் ஹாசனை விமர்சிக்கும் வனிதா..அவன் பிராடு நம்பர் ஒன்..அவனை ஜெயில்ல போடுங்க என கடும் கோபத்தில் விமரிசிக்கிறார்..
