பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காக தான் உள்ளே வந்துள்ளனர் என நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா தெரிவித்து உள்ளார். 

உதாரணமாக அவர்கள் யாராக இருந்தாலும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதானே அதிகபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது. அது மட்டுமில்லாமல் இதற்கு முன்னதாக இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்... உதாரணத்திற்கு, மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த ஓவியா எப்படி நடந்துகொண்டார் என்பது வரை நன்கு தெரிந்து அதற்கேற்றவாறு இந்த சீசன் போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். 

ஆனால் இதெல்லாம் அவர்களுடைய உண்மையான முகமே கிடையாது. ஓவியாவை பொறுத்தவரையில் அவர் மிகவும் திறமைசாலி, எதற்கும் அஞ்சாதவர், மனதில் பட்டதை போட்டு உடைக்க கூடியவர். அவர் அவராகவே இருந்ததால் தான் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றார். ஆனால் இப்போது இருப்பவர்கள் நடிக்கின்றனர். அவர்களுடைய உண்மை முகமே வேறு...

உதாரணத்திற்கு...கவினை பொருதவரையில் அவர் நார்மலாக உள்ளே வந்தார். அனைவரிடமும் நார்மலாகவே பேசி இருந்தார். ஆனால் என்னமோ அவருடைய வயதுக்கு ஏற்ற பெண்களிடம் ஒரு செட்டாக சேர்ந்து கொண்டு பேசி வருகிறார். இது காதலாக பார்க்கப்படுகிறது. இதெல்லாம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் அவ்வளவுதான். மற்றபடி காதலும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை என தெரிவித்து உள்ளார் வனிதா.

மேலும் கவின் வெளியே வந்தால் அவருக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும், சினிமாவில் ஒரு லவ்வர் பாயாக வலம் வர ஆசைப்படும் ஒரு நாயகனாக தான் விரும்புகிறார் என்றும், அதற்கான ஒரு முயற்சி தான் பிக் பாஸ் வீட்டில் தற்போது கவின் நடந்துக்கொள்வது என கிழிகிழியென பல உண்மைகளை போட்டு உடைத்து உள்ளர் வனிதா.அதே வேளையில் கைவினை பிக்பாஸ் டீம் தான் இயக்குவதாக பேச்சும் அடிபடுகிறது.