காவல் ஆய்வாளரிடம் வனிதாவுக்கு சாதகமாக செயல் படுவதாக கூறி, பீட்டர் பால் முதல் மனைவி காவல் ஆய்வாளர் மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதனால் நாளுக்கு நாள் வனிதாவின் திருமண பிரச்சனை சீரியசாகிக்கொண்டே செல்கிறது.

பழம்பெரும் நட்சத்திர ஜோடிகளான மஞ்சுளா - விஜயகுமார் தம்பதியின் மூத்த மகளான, வனிதா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார். குடும்பத்தினர் மத்தியிலும், அவப்பெயர் எடுத்து யாருடனும் பேசாமல் தன்னுடைய இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய உணர்ச்சியையும், பெண்மையையும் அறிந்த  திரையுலகை சேர்ந்த  பீட்டர் பால் என்பவரை , தன்னுடைய அம்மா - அப்பாவின் திருமண நாள் அன்றே கரம் பிடிக்க போவதாக கூறினார். இவர் அறிவித்தது போலவே இவர்களுடைய திருமணம் கடந்த வாரம், வீட்டிலேயே மிகவும் எளிமையாக கிருஸ்தவ முறையில் நடந்து முடிந்தது.

திருமணமான மறு  தினமே... பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். இதில் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறுவதற்கு முன்பே, பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளதாக முன்னாள் மனைவி தெரிவித்திருந்தார். மேலும் தொடர்ந்து இது குறித்து பல பேட்டிகளும்  கொடுத்து வந்தார்.

இவரை தொடர்ந்து, பீட்டர் பாலின் மகன் பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதில், தன்னுடைய தந்தைக்கு பல பெண்களுடன் தவறான உறவில் உள்ளதாகவும், மேலும் அடிக்கடி வீட்டிற்கு குடித்து விட்டு வருவார் என்றும் கூறியுள்ளார். எப்போதுமே அவர் உண்மையாக நடந்து கொண்டது இல்லை எனவே தனக்கு அவரை பிடிக்காது என்றும் மனம் வெறுத்து பேசியுள்ளார். மேலும் இந்த திருமண செய்தி குறித்து, அவரிடம் கேட்டபோது அவர் அதில் உண்மை இல்லை எனதெரிவித்தார். தன்னை வனிதாவின் வீட்டுக்கும் அழைத்து சென்றதாக தெரிவித்தார். 

இந்த திருமணம் விஷயத்தில் ஒரு தரப்பினர் வனிதாவை கடுமையாக விளாசி வந்தாலும், மற்றொரு தரப்பினர்.. வனிதா திருமணம் என்று ஒரு வாரத்திற்கு முன்னரே தெரிவித்தார், அப்படி இருந்தும் பீட்டர் பால் மனைவி ஏன், திருமணத்திற்கு பின் புகார் கொடுத்துள்ளார் என அவருக்கு எதிராகவும் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக, பீட்டர் பாலில் முதல் மனைவி எலிசபெத் ஹெலன்... ஏற்கனவே வனிதாவின் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த போது, காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு புகார் கொடுத்தும், அவருடைய அலட்சிய போக்கால் தான் தற்போது இவர்களுக்கு திருமணமே நடந்து முடிந்து விட்டது என்றும், எனவே காவல் ஆய்வாளர் வனிதாவுக்கு சாதகமாக செயல்படுவது போல் உளது எனவே இந்த வழக்கில் இருந்து அவரை மாற்றி முறையாக விசாரிக்க வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆய்வாளர் மீது புகார் அளித்துள்ளார்.