பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வந்த மாடல் அழகி மீரா மிதுனுக்கும், சக போட்டியாளர்கள் சிலருக்கும் அடிக்கடி பிரச்சனைகள் வந்து ஓய்கிறது. வந்த முதல் நாளே அபிராமி மீராவை, ஏற்றுக்கொள்ளாதது அவருடைய செயல்களில் இருந்தே தெரிந்தது. அவருடன் சேர்ந்து கொண்டு சாக்ஷியும், மீராவை எதிர்ப்பது போல் நடந்து கொண்டார்.

மேலும் கேப்டனாக இருக்கும் வனிதாவும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி மீராவை தினமும் அழ வைக்கின்றார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய புரோமோவின்,   மீண்டும் மீரா மிதுன் அழுகிறார். என்னை ஒருநாளைக்கு ஒருதடவை அழ வைக்கலைன்னா இவங்க யாருக்குமே தூக்கம் வராது என்று கண்ணீருடன் கூறுகிறார். 

மற்றொரு புறம், நடிகை வனிதா இவளோட போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது' என கத்துகிறார். இதற்கு மீரா...   எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருப்பதாகவும்,  இப்படியெல்லாம் என்னால இருக்க முடியாது, நான் அந்த மாதிரி கேரக்டர் கிடையாது' என்றும் அழுது கொண்டே சொல்கிறார். உடனே சாக்ஷி, மீராவை கட்டியணைத்து ஆறுதல் கூறுகிறார். 

மீரா மிதுன் மீது முதலில் ஆத்திரப்பட்ட அபிராமி கூட அவருடன் சமாதான செல்ல முயற்சிக்கின்றார். ஆனால் வனிதா, மீராவை சீண்டி சண்டை வாங்குவதில் முதல் ஆளாய் நிற்கிறார். ஏன் இந்த சண்டை வந்தது, இவர்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்சனை என இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.