பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி நான்கு நாட்கள் ஆகிறது. சிலர் பிரச்சனைகள் வந்து அழுதாலும், டாஸ்க் மூலம் போட்டியாளர்களை அழ வைத்து வருகிறார்.

ஏற்கனவே ரேஷ்மா, சேரன், சரவணன், தர்ஷன், மோகன் வைத்யா, அபிராமி உள்பட பலரும் தங்கள் சொந்தக்கதை சோகக்த்தை கூறி, வனிதா தனது சோகக்கதையை கூறுகிறார்.

தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் தனது மகன் விஜய் ஸ்ரீஹரியின் பிறந்த நாள் என்றும், தனக்கு யாருமே இல்லாத நிலையில், யாரும் ஆதரவு தராத நிலையில் தனது மகன் மட்டுமே நம்பிக்கை அளித்ததாகவும் கண்ணீர்மல்க கூறினார். 

இதுவரை, பிக்பாஸ் வீட்டில் மிரட்டி உருட்டிக்கொண்டு இருந்த நிலையில், இவரே தன்னுடைய சோகத்தை கூறி, அழுதது மற்ற பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.