Asianet News TamilAsianet News Tamil

திருமணத்தில் வனிதாவுக்கு லிப் கிஸ் கொடுத்து காதலை வெளிப்படுத்திய பீட்டர் பால்..! செம்ம ரொமான்ஸ்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் தன்னுடைய அடுத்த ரீ-என்ட்ரிக்கு பிள்ளையார் சுழி போட்ட, நடிகை வனிதா கடந்த 10 நாட்களுக்கு முன், பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், கூடவே இவர்களின் திருமண பத்திரிக்கை ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
 

vanitha 3rd marriage peter paul lip lock her wife romance in after marriage
Author
Chennai, First Published Jun 27, 2020, 4:40 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் தன்னுடைய அடுத்த ரீ-என்ட்ரிக்கு பிள்ளையார் சுழி போட்ட, நடிகை வனிதா கடந்த 10 நாட்களுக்கு முன், பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், கூடவே இவர்களின் திருமண பத்திரிக்கை ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இது வதந்தியா என்கிற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், இது குறித்து விளக்கம் கொடுத்த நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை காதலிப்பது உண்மை தான் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

vanitha 3rd marriage peter paul lip lock her wife romance in after marriage

இந்த திருமணம் தன்னுடைய இரு மகள்களின், சம்மதத்துடன் தான் நடைபெற உள்ளதாகவும் வனிதா தெரிவித்தார். அதே சமயத்தில், வனிதாவின் மகள் தன்னுடைய அம்மாவிற்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட பதிவு அனைவரையுமே நெகிழ்ச்சியடைய செய்தது.

vanitha 3rd marriage peter paul lip lock her wife romance in after marriage

இந்நிலையில் வனிதா - பீட்டர் பால் திருமணமும், இன்று கிருஸ்துவ முறைப்படி,  மிக எளிமையாக வீட்டிலேயே  நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்ததலில் வைரலாக பரவ துவங்கியுள்ளது. இந்த திருமணத்தில், வனிதாவின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அதே போல் பீட்டர் பாலின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

vanitha 3rd marriage peter paul lip lock her wife romance in after marriage

வெள்ளை நிற திருமண கவுனில் தேவதை போல் வந்த வனிதாவை, கோர்ட் சூட்டுடன் காத்திருந்த பீட்டர் பால், உதட்டில் முத்தம்மிட்டு தன்னுடைய காதலை வெளிக்காட்டினார். பின்னர் கிருஸ்தவ முறைபடி மோதிரம் மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios