தெய்வமகள், சீரியல் மூலம் சின்னத்திரையில் தன்னுடைய திரை பயணத்தை துவங்கிய ஏர் ஹோஸ்டர்ஸ், வாணி போஜன். தற்போது, இவர் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில், பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், நடிகர் தனுஷை வைத்து இயக்கி வரும், 'ஜகமே தந்திரம்' படத்தில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், மற்றொரு பக்கம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'குயின்' படத்தின் தயாரிப்பு, மற்றும் வெப் சீரிஸ் தயாரிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் சார்பாக அவரது உதவி இயக்குநர் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்துள்ளார்.

மேலும் செய்திகள்: ஊரடங்கு நேரத்தில்... நடிகை ரோஜாவின் பாதங்களுக்கு பூ போட்டு வரவேற்பு! நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!
 

இந்த வெப் சீரிஸில், சுப்ரமணிய புறம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, நயன்தாராவுடன் ராஜா ராணி, அஞ்சலியுடன் பலூன் போன்ற பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார்.  அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸின் ப்ரீ புரோடுக்ஷன் மற்றும் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாக கூற்றப்படுகிறது.

இந்த வெப் சீரிஸ் 8 எபிசோட்களை கொண்டுள்ளதாகவும், அமேசான் பிரைமில் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.சின்னத்திரையில் இருந்து வந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும்  நடிகை வாணி போஜன் நடிப்பில் ஓ மை கடவுளே திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.