சூர்யா படத்தில் இணைந்த ரம்யா பாண்டியன் - வாணி போஜன்! பூஜையுடன் ஆரம்பமானது படப்பிடிப்பு!

வித்தியாசமான  களங்களைத் தேர்வு செய்து, தயாரித்து அதில் வெற்றியும் பெற்று வருகிறது சூர்யாவின் 2டி நிறுவனம். '36 வயதினிலே' படம் தொடங்கி சமீபத்திய 'சூரரைப் போற்று' படம் வரை இந்த நிறுவனத்தின் வித்தியாசமான கதைத் தேர்வு அனைவருக்கும் தெரியும். தற்போது 2 -டி நிறுவனத்தின் 14-வது திரைப்படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. 
 
vani bojan and ramya pandian join with surya next production

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல், சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் ஆரம்பம்பமாகிறது. இதில் படக்குழுவினருடன்  ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன்,  தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், கலரிஸ்ட் பாலாஜி கோபால், இயக்குனர் ஜே. ஜே ஃபிரடெரிக் உள்ளிட்ட பலர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலந்துக் கொண்டனர். 

vani bojan and ramya pandian join with surya next production

இந்தப் படத்தில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை வந்து, அனைவரது மனதையும் கொள்ளைக் கொண்ட ரம்யா பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன் இணைந்து பல்வேறு படங்களில் தன் நடிப்பால் முத்திரை பதித்து வரும் வாணி போஜன்னும்  இணைந்து நடிக்க உள்ளார். 

vani bojan and ramya pandian join with surya next production

மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மித்துன் மாணிக்கம். இவர்களுடன் இணைந்து 'கோடங்கி' வடிவேல் முருகன், செல்வேந்திரன் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற் அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி என்பவர் இயக்க உள்ளார். 

vani bojan and ramya pandian join with surya next production

ஒளிப்பதிவாளர் சுகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார்.  பாடகர் க்ரிஷ், இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். வித்தியாசமான கதை களத்தில் உருவாக உள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில்  எக்க சக்க எதிர்பார்ப்பு நிலவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios