'பொன்னியின் செல்வன்' படத்தை செம்ம பிஸியாக இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர் மணிரத்னம், தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள திரைப்படம் 'வானம் கொட்டட்டும்'. 

இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மடோனா செபஸ்டியன் கதாநாயகியாக நடித்து உள்ளனர்.

மேலும் நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகர் சரத்குமார் மற்றும் அவருடைய மனைவி ராதிகா சரத்குமார் இருவரும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களை தவிர சாந்தனும், நந்தா துரைராஜ், பாலாஜி சக்திவேல், போன்ற பலர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார் பிரபல பாடகர் ஸ்ரீராம். பிரணிதா ஜெயராம் ஒளிப்பதிவில், சங்கத்தமிழன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகை ராதிகா சரத்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு உறுதி செய்துள்ளனர். 

அந்த வீடியோ இதோ...